இந்தோனேசியாவில் சிக்கிய ராட்சத முதலை: மீண்டும் அது தாக்கும் என்று நம்பும் மக்கள் செய்த வித்தியாசமான செயல்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் 500 கிலோ எடையும் 14 அடி நீளமும் கொண்ட ராட்சத முதலை ஒன்று சிக்கியது.

அந்த முதலையை ஒரு புல்டோசரில் வைத்துதான் தூக்கி வர முடிந்தது, அந்த அளவுக்கு அது பிரமாண்டமாக இருந்தது.

இந்தோனேசியாவில் பலரை தாக்கியதால் அந்த 50 வயதான முதலை பிடிக்கப்பட்டது.

கூர்மையான பிளேடுகள் இணைக்கப்பட்ட வலைகள் மூலம் இந்தோனேசிய தீவான Bangka Belitungஇல், Kayubesi நதியில் உள்ளூர் மக்களால் அந்த முதலை பிடிக்கப்பட்டது.

மூட நம்பிக்கைகள் கொண்ட மக்கள் அந்த முதலையை அப்படியே புதைத்தால், அது மீண்டும் வந்து தங்களைத் தாக்கும் என்று நம்புவதால், அதன் தலையை வெட்டி தலையை ஒரு இடத்திலும் உடலை வேறொரு இடத்திலுமாக தனித்தனியே புதைத்துவிட்டனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்