கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு... எப்போது வழங்கப்படும்? ரஷ்யா முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

‘ஸ்பூட்னிக்-வி’ என அழைக்கப்படும் கொரோனா தடுப்பூசி முதன்மையாக ரஷ்யாவிற்குள் தேவையை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ கூறினார்,

மேலும், வெளிநாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்யப்படும் என மிகைல் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேசமயம், ரஷ்யாவின் தடுப்பூசி ஆபத்தானது என அமெரிக்க, ஜேர்மனி உட்பட வெளிநாடுகள் விமர்சித்து வருகின்றன.

இதுகுறித்து பதிலளித்த மிகைல், தடுப்பூசி பற்றிய வெளிநாடுகளின் விமர்சனங்கள் ஆதாரமற்றவை என்றும் நியாயமான போட்டி குறித்த அச்சத்தால் இது ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் பேட்ச் தயாரிக்கப்பட்டு 2 வாரங்களில் பயன்படுத்த தயாராக இருக்கும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ அறிவித்தார்.

இன்று, தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு வாரங்களுக்குள், மருந்தின் முதல் பேட்ச் வெளியிடப்படும், மேலும் சுகாதார ஆபத்துள்ள குழுக்களில் மருத்துவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு வழங்கப்படும்.

மேலும் சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு வருகிறது, இது ரஷ்ய குடிமக்கள் தங்கள் ஆரோக்கியத்தின் நிலையை உறுதிப்படுத்த உதவும்.

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மருந்தின் சாத்தியமான விளைவுகளையும் இந்த செயலி கண்காணிக்கும் என மிகைல் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி கமலேயா ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்