பாஸ்போர்ட்டிற்காக இந்திய பெண்ணை திருமணம் செய்து... பயங்கரமான செயலில் ஈடுபட்டு வந்த சீன இளைஞன்! திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
7068Shares

சீனாவுக்காக உளவு பார்த்ததாக லூ சாங் என்ற நபரை இந்திய பொலிசார் ஏற்கனவே கைது செய்த நிலையில், தற்போது பண மோசடி மற்றும் ஹாவாலா பணப்பரிவர்த்தையில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு சீனாவை சேர்ந்த லூ சாங் என்ற இளைஞர் சார்லி பெங் என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்து உளவு பார்த்ததாக கூறி, டெல்லி பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது.

இதையடுத்து தற்போது இந்த இளைஞன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். திபெத்தில் உள்ள லாசாவை சேர்ந்த லூ சாங் இந்திய பாஸ்போர்ட் பெறுவதற்காக மிஸோரம் மாநிலம் லுங்லெய் இடத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

டெல்லியில் போலியாக செயல்பட்டு வந்த சீன நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

டெல்லி மட்டுமல்லாமல் காசியாபாத், குருகிராம் உள்ளிட்ட பகுதிகளில் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, 300 கோடி ரூபாய்க்கு அளவுக்கு ஹவலா பணம் புழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு , வங்கி ஊழியர்கள் உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் லூ சாங்குக்கு தொடர்பு இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததையடுத்து, அவரை டெல்லி பொலிசார் நேற்றிரவு கைது செய்தனர். அவரிடத்தில் ஆதார் கார்டு, பான் கார்டு போன்றவையும் இருந்தன.

மத்திய நேரடி வரி விதிப்பு வாரிய அதிகாரிகள் கூறுகையில், லூ சாங் 8 முதல் 10 வங்கிக்கணக்குகள் போலி சீன நிறுவனங்களின் பெயரில் தொடங்கியுள்ளார்.

போலி சீன நிறுவனங்கள் பெயரில் 300 கோடிக்கு ஹவாலா வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளளார். பந்தன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஊழியர்களின் உதவியுடன் தினமும் 3 கோடி ரூபாய் பணம் ஹவாலாவில் புழங்கியுள்ளளது.

அவரின் பெயரிலேயே 40 வங்கிக்கணக்குகள் உள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1000 கோடி மதிப்புக்கு ஹவலா பணம் புழங்கியிருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்