இறுதிக்கட்ட சோதனைக்கு முன் இது எப்படி நடந்தது? ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை மறுஆய்வு செய்ய WHO முனைப்பு!

Report Print Basu in ஏனைய நாடுகள்
169Shares

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகளை மறுஆய்வு செய்ய விரும்புவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

புதன்கிழமை 2,000 க்கும் மேற்பட்டோருக்கு இறுதி கட்ட சோதனை தொடங்கவிருந்த நிலையில் செவ்வாயன்றே ஜனாதிபதி விளாடிமிர் புடின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடாக ரஷ்யாவை அறிவித்தார்

உலகளவில் ஆய்வில் இருக்கும் 150க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளில் தற்போது 28 தடுப்பூசிகள் மனிதர்கள் மீது தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருவதாக WHO கூறுகிறது.

அவற்றில் ஆறு தடுப்பூசி மட்டுமே 3வது மற்றும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன, பெரிய அளவிலான மக்களிடையே சோதனை மேற்கொள்வதே தடுப்பூசியின் இறுதி கட்டமாகும்.

கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கிய ரஷ்யாவின் தடுப்பூசி, மருத்துவ மதிப்பீட்டின் படி மனிதர்கள் மீது தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வரும் 28 தடுப்பூசியில் ஒன்றாகும், ஆனால் இது முதற் கட்ட சோதனையிலே இருப்பதாக உலக சுகாதார அமைப்பால் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய விஞ்ஞானிகள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ள WHO, சோதனைகளின் விவரங்களை மறுஆய்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியின் அனைத்து முன்னேற்றங்களையும் WHO வரவேற்கிறது.

தடுப்பூசி ஆராய்ச்சியை துரிதப்படுத்துவது வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் நிறுவப்பட்ட செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

இறுதியில் உற்பத்திக்கு செல்லும் தடுப்பூசி பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று WHO கூறியது.

பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசியே உலகளாவிய பொது பயன்பாட்டிற்கு நன்மையாக இருக்கும், மேலும் உலகெங்கிலும் இதுபோன்ற தடுப்பூசிகள் விரைவாகவும், நியாயமானதாகவும், சமமாகவும் கிடைக்க வேண்டும் என WHO வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்