வீட்டின் மேற்கூரையை தாக்கும் மின்னல்: அதிரவைத்த வீடியோ காட்சிகள்

Report Print Fathima Fathima in ஏனைய நாடுகள்
1968Shares

பிரித்தானியாவின் வேல்ஸில் வீட்டின் மேற்கூரையை மின்னல் தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளன.

நேற்று மாலை Donna Tizzard என்ற இளம்பெண் எடுத்த அந்த வீடியோவில், Gwersyllt நகரில் அமைந்திருக்கும் வீட்டின் மேற்கூரையை மின்னல் தாக்குகிறது.

அடுத்த நொடியே ஆரஞ்சு வண்ணத்தில் பாரிய புகை கிளம்ப, வீட்டில் இருப்பவர்களை அழைக்கிறார் Donna.

அத்துடன் அவசர உதவி மையத்துக்கும் அழைத்து நடந்ததை விவரித்துள்ளார்.

உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்ற போது, எந்தவொரு விபரீதமும் நடக்கவில்லை என தெரியவந்தது.

இதேபோன்று பயங்கரமான இடியுடன் கூடிய மழையால் Wrexham நகரிலிருந்து ஏராளமான அழைப்புகள் வந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்