வடகொரியாவையும் பீதியடைய வைத்துள்ள கொரோனா! அங்கு இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள்: வெளியான புகைப்படங்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
226Shares

வடகொரியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரிப்பதால், பேருந்துகள் மற்றும் இரயில்களில் கிருமி நீக்கம் செய்யப்படுகிறது.

உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப் படைத்து வந்த போது, எங்கள் நாட்டில் கொரோனா இல்லை என்று வடகொரியா அதிகாரப்பூர்வமாக கூறியது.

ஆனால், சீனாவிற்கு அருகில் இருக்கும் வடகொரியாவில் எப்படி கொரோனா பரவாமல் இருக்கும், இது சீனாவை காப்பாற்றுவதற்கு வடகொரியாவின் பிளான் என்று கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து கடந்த ஜுலை மாதம் திடீரென்று வடகொரியா தன்னுடைய அவசரகால நிலையை அதிகபட்சமாக உயர்த்தியது.

ஏனெனில், தென்கொரியாவிலிருந்து, வடகொரிய நாட்டின் எல்லையில் அமைந்துள்ள கேசாங்க நகருக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவரை தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதோடு அவருடன் கடந்த ஐந்து நாட்களாக தொடர்பிலிருந்த நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வடகொரிய அரசு முயற்சிகளை மேற்கொண்டது.

இந்நிலையில் தான் நாட்டில் கொரோனா பாதிப்பு தீவிரமானால் அதை எதிர்த்து போராடுவதற்கு வடகொரியாவிடம் அந்தளவிற்கு பொருளாதார வசதியோ, சுகாதார அமைப்போ இல்லை.

இதனாலே அதிபர் கிம் ஜாங் உன் வைரஸ் பாதிப்பின் அதிகரிப்பை தவிர்ப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது. அந்த சோதனைக்குட்படுத்தப்பட்ட நபரின் கொரோனா பாதிப்பு இருந்ததா? இல்லையா? என்பது குறித்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

இந்நிலையில், தலைநகர் பியோங்யாங்கில் பேருந்துகளில் ஏறுவதற்கு முன்பு மக்களுக்கு கைகளை சுத்தம் செய்வதற்காக சானிடைசர் வழங்கப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமின்றி, தலைநகரின் ரயில் நிலையத்தில், முகக்கவசங்களை அணிந்திருப்பவர்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வெப்பநிலையும் சரிபார்க்கப்படுகிறது.

அதிகபட்ச அவசரகால அமைப்பு தேவைக்கேற்ப நாங்கள் பிரச்சார நடவடிக்கைகளை முடுக்கி வருவதாக வடகொரியா ரயில் நிலையத்தின் தலைமை மருத்துவர் ஜான் கியோங் ஹுய் கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் குறிப்பாக வாடிக்கையாளர்களின் கைகளை கிருமி நீக்கம் செய்வதற்கும் அவர்களின் உடல் வெப்பநிலையை எடுத்துக்கொள்வதற்கும் முன்னெப்போதையும் விட அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்