பிணவறைக்கு சென்ற பெண் ஊழியர்... தரையில் உட்கார்ந்திருந்த ’பெண் பிணம்’: ரஷ்ய மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
5793Shares

ரஷ்யாவில் பிணவறைக்கு சென்ற பெண் ஊழியர் ஒருவர், அங்கு கை கால்களை பரப்பியபடி ‘பெண் பிணம்’ ஒன்று உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயத்தில் உறைந்துபோனார்.

பின்னர் பயத்தை மறைத்துக்கொண்டு, அந்த 81 வயது மூதாட்டியின் அருகில் சென்ற அந்த பெண் ஊழியர், பாட்டி, படுத்துக்கொள்ளுங்கள், அமைதியாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

பிணவறைக்கு வெளியே அமர்ந்திருந்த ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், என்னடா, இந்த பெண்ணுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?, பிணத்துடன் பேசிக்கொண்டிருக்கிறாரே என்று எண்ணியபடி, பிணவறைக்குள் மெதுவாக நுழைய, அவர் கண்ட காட்சி அவரை பதற வைத்திருக்கிறது.

உட்கார்ந்திருந்த மூதாட்டி, அந்த பெண் ஊழியரின் கையைப் பிடித்துக்கொண்டு எனக்கு உதவுங்கள் என்று கெஞ்சிக்கொண்டிருப்பதைக் கண்ட சாரதி திடுக்கிட்டிருக்கிறார்.

பின்னர் ஒரு வழியாக இருவரும் நடந்ததை ஒருவாறாக யூகித்துக்கொண்டு, அந்த மூதாட்டியை துணிகளில் சுற்றி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள்.

அவரைக் கண்ட அந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஒருவர், அந்த மூதாட்டியின் உறவினரான Tatiana Kulikova என்பவரை அழைத்து, இங்கே ஒரு அசாதாரண சம்பவம் நிகழ்ந்துள்ளது, அவர் உயிருடன் இருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

நடந்தது என்னவென்றால், மருத்துவ ரீதியாக 15 நிமிடங்களுக்கு முன்பே இறந்துபோனதாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட Zinaida Kononova (81) என்ற அந்த பெண்மணியை, மருத்துவர்கள் 2 மணி நேரம் கவனித்துக்கொண்டிருக்கவேண்டும்.

ஆனால், அவர்கள் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் ஆனதுமே, இனி இந்தப் பெண் உயிரோடு வரப்போவதில்லை என்று எண்ணி, அவரை பிணவறைக்கு அனுப்பிவிட்டார்கள்.

ஆனால், சிறிது நேரத்திற்குப்பின் Zinaidaவுக்கு நினைவு திரும்ப, பிணவறையில் இருந்த மேசை மேல் ஏறி வெளியேற முயலும்போது, கீழே விழுந்துள்ளார்.

அப்படி விழுந்து, எழ முடியாமல் அமர்ந்திருக்கும்போதுதான் அந்த மருத்துவமனை பெண் ஊழியர் உள்ளே வர, பிணம் உட்கார்ந்திருப்பதாக எண்ணி அவர் திகிலடைந்துள்ளார்.

ஆகவே, Zinaidaவின் உறவினர்கள் மருத்துவமனை மீது வழக்க தொடர இருக்கிறார்கள். இதற்கிடையில், மருத்துவமனியின் தலைமை மருத்துவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளார்.

அத்துடன், Zinaidaவை இறந்து போனதாக அறிவித்த மயக்கவியல் நிபுணருக்கும் சிக்கல் ஏற்படலாம் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்