பேஸ்புக்கால் பொது சுகாதாரத்திற்கு பெரும் ஆபத்து! ஆர்வலர்கள் குழு எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்
59Shares

சமூக வலைதளமான பேஸ்புக் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என ஆர்வலர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பேஸ்புக் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு தங்கள் கண்டுபிடிப்புகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

அதில், பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் கடந்த ஆண்டில் 3.8 பில்லியன் தடவைகள் பார்க்கப்பட்டுள்ளன, இது கொரோனா நெருக்கடியின் போது உயர்ந்துள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளத்தில் பரவும் தடுப்பூசிகள் குறித்த தவறான தகவல்களால் தடுப்பூசி போட தயாராக இருக்கும் மக்கள் தங்கள் முடிவை மாற்ற வழிவகுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் முதல் ஜூன் வரை, கொரோனா தொடர்பான 98 மில்லியன் தவறான தகவல்களுக்கு எச்சரிக்கை முத்திரையை பயன்படுத்தினோம் மற்றும் உடனடி தீங்கு விளைவிக்கும் ஏழு மில்லியன் தவறான தகவல்களை அகற்றினோம் என அவாஸ் ஆர்வலர்கள் குழு தெரிவித்துள்ளனர்.

சுகாதார அதிகாரிகளிடமிருந்து தகவல்களை பெறும் வகையில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உதவி செய்துள்ளோம், கொரோனா பற்றிய இணைப்பை யாராவது பகிர்ந்து கொள்ள முயற்சிக்கும்போது, அவர்களை நம்பகமான சுகாதாரத் தகவலுடன் இணைக்க வழிவகை செய்துள்ளோம் என ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் நாங்கள் தவறான தகவல்கள் தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை பிரதிபலிக்கவில்லை என்று பேஸ்புக் கூறியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்