Fact Check: கொரோனா தடுப்பூசி போட்ட ரஷ்ய ஜனாதிபதி புடின் மகள் உயிரிழந்துவிட்டதாக வெளியான பொய்யான செய்தி

Report Print Santhan in ஏனைய நாடுகள்
422Shares

ரஷ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை போட்டுக் கொண்ட புடின் மகள் உயிரிழந்துவிட்டதாக செய்தி வைரலாகி வரும் நிலையில், அதன் உண்மை என்ன என்பது தெரியவந்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்காக பிரித்தானியா, ரஷ்யா, இந்தியா போன்ற பலவேறு நாடுகள் இறங்கியுள்ளது.

இதில் ஒரு சில நாடுகளில் முதல் கட்ட சோதனை, இரண்டாம் கட்ட சோதனை என கொரோனாவிற்கான தடுப்பு மருந்து நடைமுறையில் உள்ளது.

இந்நிலையி ரஷ்யா கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் தடுப்பு மருந்தை கண்டுபிடித்த முதல் நாடு ரஷ்யா என்று கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி இதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக அதிபர் புடின் அறிவித்தார்.

அதில், இந்த தடுப்பு மருந்தின் முதல் டோஸை எனது மகளுக்கு கொடுத்துள்ளோம். அவருக்கு ஆரம்பத்தில் காய்ச்சல் இருந்தது.

அது உடனடியாக சரியாகிவிட்டது. அவரது உடலில் ஆன்டிபாடிகள் அதிகரித்து அவர் நலமுடன் இருப்பதாக புடின் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை குறித்து விஞ்ஞானிகள் கேள்வி எழுப்பிய நிலையிலும் இந்த மருந்தை புடின் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் புடின் மகள் குறித்தும் ரஷ்யாவின் தடுப்பு மருந்து குறித்தும் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில், தடுப்பு மருந்து போடப்பட்ட புடின் மகள் Katerina Tikhonova உயிரிழந்துவிட்டதாக செய்தி வெளியாகின. அதாவது அவருக்கு இரண்டாவது டோஸ் மருந்து கொடுக்கப்பட்டவுடன் அவரது உடலின் வெப்பநிலை அதிகரித்ததாகவும் அதனால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் கூறப்பட்டது.


ஆனால் இது உண்மை இல்லை, முற்றிலும் பொய் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்