வெளிநாட்டில் இலங்கை பெண் அனுபவித்த வந்த சித்ரவதை! உடலில் தீக்காயங்கள்: முதலாளி வெறிச் செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1822Shares

இலங்கையை சேர்ந்த வயதான வீட்டு வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்ததற்காக குவைத்தில் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குவைத் நாட்டில் இலங்கையை சேர்ந்த வயதான வீட்டு வேலை செய்யும் பெண் ஒருவர், தனது முதலாளியால் சித்திரவை செய்யப்பட்டு, சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக இலங்கை தூதரகத்திடம் உதவி கோரினார்.

இதையடுத்து இது குறித்து தூதரம், உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்தது. அதன் பின் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த இலங்கை பெண் வயது முதிர்வு காரணமாக குவைத்தை விட்டு வெளியேறி, சொந்த நாட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளார்.

ஆனால், அவரின் கோரிக்கையை வீட்டு முதலாளி(பெண்) ஏற்காததால், கடும் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டார். இதன் காரணமாக அவரின் உடலின் பல்வேறு இடங்களில் சூடு வைக்கப்பட்டது. அதற்கான காயங்கள் அவரது உடலில் இருந்துள்ளன.

அந்த முதலாளி பெண்ணிற்கு மூன்று மகன்கள் உள்ளனர். அவர்களும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட இலங்கை பெண், அவரது காயங்கள் மற்றும் சித்வரதை குறித்து விசாரணை நடத்த இலங்கை தூதரகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

குடும்ப சூழ்நிலை காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பெண்கள் பலர் இப்படி சித்ரவாதைக்குள்ளாவதும், பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்