ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு விஷம்? நடுவானில் விமானத்தில் என்ன நடந்தது? செய்தித் தொடர்பாளர் சந்தேகம்

Report Print Basu in ஏனைய நாடுகள்
1426Shares

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்துள்ள அவரது செய்தித் தொடர்பாளர், அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்து நவால்னியின் செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இன்று காலை நவால்னி டாம்ஸ்கிலிருந்து மாஸ்கோவிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

விமான பயணத்தின் போது, ​​அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து விமானம் ஓம்ஸ்கில் அவசரமாக தரையிறங்கியது. நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டுள்ளது. இப்போது நாங்கள் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

கிரா யர்மிஷ் மேலும் கூறியதாவது, நவால்னி குடித்த தேநீரில் விஷம் கலக்கப்பட்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். காலையிலிருந்து அவர் தேநீர் மட்டும் தான் குடித்தார். நவால்னி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருப்பதாக கூறினார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கடுமையாக விமர்சிக்கும் நபர்கள் நவால்னியும் ஒருவர் ஆவார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்