வெளிநாட்டில் கணவரை கொன்று உடலை வெட்டி நொறுக்கிய இந்திய நர்ஸ்: வெளியான பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1818Shares

ஏமன் நாட்டவரான இளைஞரை கொன்று உடலை வெட்டி நொறுக்கி குடிநீர் தொட்டியில் மறைவு செய்த வழக்கில் இந்திய செவிலியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த தண்டனையில் இருந்து செவிலியரை காப்பாற்றி, இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகளை தற்போது அவரது குடும்பத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த 31 வயது நிமிஷப்பிரியா என்பவரே தற்போது ஏமன் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் உள்ளார்.

கொலை வழக்கில் நிமிஷாவுக்கு மாகாண நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை கடந்த 18 ஆம் திகதி ஏமன் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

இருப்பினும் ஏமன் ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் குழுவுக்கு மேல்முறையீடு செய்ய 15 நாட்கள் அவகாசமளித்துள்ளனர்.

குறித்த வழக்கில் நிமிஷாவுக்கு உதவிய ஹனான் என்ற செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நிமிஷா வழக்கின் பின்னணி:

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏமன் நாட்டவரும் நிமிஷாவுடன் இணைந்து சுகாதார மையம் ஒன்றை நடத்தி வந்தவருமான தலால் அப்து மஹ்தி என்பவர் கொல்லப்பட்டார்.

நிமிஷா கொலை செய்யப்பட்ட தலால் என்பவரின் மனைவி என ஏமன் நாட்டில் பதிவாகியுள்ளது.

ஆனால் அந்த ஆவணங்கள் அனைத்தும் போலி எனவும், சுகாதார மையத்திற்கான அனுமதி பெறவே அவ்வாறு ஆவணங்கள் தயார் செய்ததாக நிமிஷா உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருமணமான தலால், அதன் பின்னர் தமக்கு தொல்லை அளித்து வந்ததாகவும், போதை மருந்துக்கு அடிமையான அவருக்கும் நண்பர்களுக்கும் ஒத்துழைக்க தம்மை கட்டாயப்படுத்தி வந்ததாகவும் நிமிஷா தெரிவித்துள்ளார்.

பலமுறை துப்பாக்கியை காட்டி மிரட்டி, தம்மிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் தெரிவித்துள்ள நிமிஷா,

ஒரு கட்டத்தில் காவல நிலையம் சென்று தலாலுக்கு எதிராக புகார் அளித்ததை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிறை தண்டனை முடிந்து வந்த தலால் அதன் பின்னர் நிமிஷாவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றியதுடன், அதிக தொல்லை அளித்தும் வந்துள்ளார்.

இதனால் தமது உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த நிமிஷா தமது தோழியான ஏமானிய செவிலியர் ஹனானுடன் இணைந்து தலாலை கொன்று அவரது சடலத்தை மருத்துவ முறையில் வெட்டி நொறுக்கி, குடிநீர் தொட்டியில் மறைவு செய்துள்ளனர்.

கொலை செய்த பின்னர் சுமார் 200 கி.மீற்றர் தொலைவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நிமிஷா வேலைக்கும் சேர்ந்துள்ளார்.

இதனிடையே தலால் மாயமானதும், கூடவே நிமிஷாவை காணவில்லை என உள்ளூர் பத்திரிகையில் செய்தி வெளியாக, நிமிஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது சனா பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறையில் நிமிஷா மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

இதனிடையே, 70 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கினால் வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக தலாலின் குடும்பம் அறிவித்துள்ளதாக நிமிஷாவின் கணவர் டாமி தாமஸ் தெரிவித்துள்ளார்.

டாமி தாமஸ் 2015 வரை ஏமனில் பணியாற்றி வந்துள்ளார். தலால் உருவாக்கிய திருமண ஆவணங்கள் அனைத்தும் போலி என தாமஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்