என்னையே எனக்கு அடையாளம் தெரியவில்லை... நான்கு முறை அழகை அதிகரிக்கும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அழகிய இளம்பெண்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
265Shares

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகிய இளம்பெண் ஒருவர், தன் அழகை அதிகரிப்பதற்காக நான்கு முறை தன் மூக்கில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

Wanessa Moura (27) என்னும் அந்த மொடல், சுமார் 15,000 பவுண்டுகள் செலவு செய்து அவர் அந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.

தன் மூக்கு பெரிதாக இருந்ததால், பல ஆண்டுகளாக தன்னை பலர் கேலி செய்ததுண்டு என்று கூறும் Wanessa, நான்கு முறை அழகாக்கும் அறுவை சிகிச்சை செய்தும் இன்னமும் தனக்கு திருப்தி ஏற்படவில்லை என்று கூறுகிறார்.

இன்னும் ஒரு சிகிச்சை செய்துகொண்டு இப்போது இருக்கும் குறைகளையும் சரி செய்துகொள்ள இருப்பதாக தெரிவிக்கிறார் Wanessa.

ஆனால், ஒரு பிரச்சினை, தான் முன்பு இருந்ததற்கு, இப்போது கண்ணாடியில் தன்னைப் பார்ப்பதற்கு தனக்கே அடையாளம் தெரியவில்லை என்பது மட்டும் உண்மை என்கிறார் அவர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்