வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு மன அழுத்தம்? வேறொருவரின் கையில் கொடுக்கப்பட்ட அதிகாரம்: யாருக்கு தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1022Shares

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மன அழுத்ததில் இருப்பதால், அதை சமாளிக்கும் வகையில் தன் சகோதரிக்கு தேவையான அதிகாரத்தை ஒப்படைத்துள்ளதாக உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் சர்வாதிகாரி என்றழைக்கப்படும் கிம் ஜாங் உன் கடந்த சில மாதங்களுக்கு பின்பு பொதுவெளியில் தென்படாததால், அவர் இறந்துவிட்டார் என்றும், அவருடைய சகோதரியான Kim Yo Jong தான் இனி வடகொரியாவை ஆட்டிப் படைக்க போவதாகவும் என்று செய்திகள் வெளியாகின.

Credit: EPA

ஆனால் அதன் பின் கிம் பொது வெளியில் தோன்றி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் கிம் உடல் அளவில் ஏதோ பிரச்சனை சந்தித்து வருகிறார் என்பது மட்டும், அவருடைய சமீபத்திய கூட்டங்களின் உரையாடலின் போது தெரிந்தது.

இந்நிலையில் ஏற்கனவே தென் கொரியா மற்றும் அமெரிக்காவிற்கான கொள்கையின் பொறுப்பில் இருக்கும் தன்னுடைய சகோதரி Kim Yo Jong-க்கு, கிம் ஜாங் உன் தேவையான அதிகாரத்தை கொடுத்துள்ளார்.

இதற்கு முக்கிய காரணம், அவர் மன அழுத்ததில் இருப்பதால் அதை சமாளிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உளவு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

Credit: AP:Associated Press

தென் கொரியாவின் புலனாய்வுக் குழுவின் உறுப்பினர் Ha Tae-kyung, உளவுத் தலைவர்களுக்கான கடந்த வியாழக்கிழமை நடந்த மாநாட்டின் போது, இந்த அதிகாரங்கள் மாற்றப்படுவது குறித்து வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், கிம் ஜாங்-உன் தனது முழுமையான அதிகாரத்தை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார், அவற்றில் சில மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, பிரபலா ஊடகமான Chosun Ilbo தெரிவித்துள்ளது.

இதே போன்று அங்கிருக்கும் துணை அதிகாரிகள் சிலருக்கும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

Credit: AFP

மேலும், கிம்மிற்கு Ri Sol Ju என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் யாரும் இதுவரை பொதுவெளியில் காட்டப்படவில்லை, அவர்களுக்கு பத்து, ஏழு மற்று மூன்று வயதுடையவர்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்