வெளிநாட்டில் நடுக்கடலில் 3 நாட்கள் உயிருக்கு போராடிய பிரித்தானியர்: கடலோர காவல்படை தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
81Shares

ஸ்பெயின் நாட்டில் கடலில் தத்தளித்தபடி மூன்று நாட்கள் உயிருக்கு போராடிய பிரித்தானியரை கடலோர காவல்படை மீட்டுள்ளது.

குறித்த பிரித்தானியர் ஒரு சொகுசு கப்பலில் இருந்து தவறி விழுந்ததாகவும், surfboard ஒன்றின் உதவியுடன் கடலில் மிதந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

மார்பெல்லா நகர கடற்பகுதியில் இருந்தே திங்களன்று மதியம் 55 வயதான அந்த பிரித்தானியர் மீட்கப்பட்டுள்ளார்.

தனியாருக்கு சொந்தமான Estelar என்ற உல்லாசப்படகு சம்பவத்தின் போது கடந்து செல்கையில், அதன் ஊழியர்களில் சிலர், கடலில் ஒருவர் மிதப்பதைக் கண்டு கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Estelar படகில் சென்றவர்கள் அந்த பிரித்தானியரிடம் விசாரிக்கையில், சொகுசு கப்பலில் இருந்து தவறி விழுந்த பின்னர் பல நாட்களாக கடலில் தத்தளிப்பதாக கூறியுள்ளார்.

உள்ளூர் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவலில், அந்த பிரித்தானியர் செயற்கை உடல் வெப்பக் குறைவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளது.

அவர் அளித்த தகவலின் அடிப்படையில், சொகுசு கப்பல் ஒன்றில் இருந்தே தவறி விழுந்துள்ளார், ஆனால் அந்த கப்பலை இதுவரை அடையாளம் காண முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் அவர் தொடர்பில் திங்களன்று இரவு வரை எவ்வித தகவலும் பெறப்படவில்லை என்றே தெரிய வந்துள்ளது.

இருப்பினும், கப்பலில் இருந்து தவறி விழுந்தவருக்கு கடலில் surfboard எவ்வாறு கிடைத்தது என்பது மர்மமாகவே உள்ளது எனவும்,

அவர் ஸ்பெயின் நாட்டில் வசிப்பவரா அல்லது சுற்றுலா பயணியா என்பது உள்ளிட்ட சந்தேகங்கள், அவர் குணமடைந்த பின்னரே உறுதி செய்யப்படும் என்கிறார்கள் அதிகாரிகள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்