கொரோனா முற்றாக குணமடைந்த நபருக்கு மீண்டும் சிக்கல்... உலகில் முதன்முறை: குழப்பத்தில் நிபுணர்கள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
323Shares

கொரோனா முற்றாக குணமடைந்த இளைஞர் ஒருவருக்கு சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலை ஹொங்ஹொங் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

33 வயதுடைய இளைஞர் ஒருவருக்கே நான்கரை மாதங்களுக்கு பின்னர் கொரோனா பாதிப்புகள் மீண்டும் கண்டறியப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா முற்றாக குணமடைந்த ஒருவருக்கு சில மாதங்கள் இடைவெளியில் மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது உலகில் இதுவே முதன்முறை என ஹொங்ஹொங் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஆனால், ஒரே ஒரு வழக்கை கருத்தில் கொண்டு, ஒருமுறை முற்றாக குணமடைந்த நபர்களுக்கு கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்படும் என்ற முடிவுக்கு வர முடியாது என உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஹொங்ஹொங் பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, முதன்முதலில் கொரோனாவுக்கு இலக்கான அந்த நபர் 14 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துள்ளார்.

தொடர்ந்து பூரண குணமடைந்ததாக மருத்துவமனை கண்டறிந்ததை அடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் ஸ்பெயின் சென்று திரும்பிய இவர், விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா சோதனையில் சிக்கியுள்ளார்.

எவ்வித அறிகுறிகளும் அவரிடம் அப்போது தென்படவில்லை என்றே கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் தற்போது 23 மில்லியன் மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்டால், உடம்பில் மீண்டும் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையிலான பாதுகாப்பு அம்சம் உருவாகும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆனால் அந்த பாதுகாப்பு அம்சம் எதுவரை மனித உடலில் நீடிக்கும் என்பதற்கு விஞ்ஞானிகளிடம் பதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்