350-க்கும் மேற்பட்ட சடலங்கள்! கட்டுமான வேலைக்காக தோண்டிய இடத்தில் காத்திருந்த அதிர்ச்சி: வெளியான புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
468Shares

ஜப்பானில் ரயில் நிலையத்திற்கான கட்டுமான பணியின் போது, சிறிய வட்டமான கல்லறைகளில் 350 பேரின் எலும்புகள் அடங்கிய புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள்து.

ஜப்பானின் ஒசாக நகரில் ரயில் நிலையத்திற்கான கட்டுமான தளத்தில் 350 பேர் அடங்கிய புதைக்குழி மற்றும் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதை ஒசாமா அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும், கடந்த 1868-ஆம் ஆண்டில் இருந்து இந்த தளம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

தோண்டப்ப்பட்ட இடங்களில், விலங்குகளின் எலும்புகள், மட்பாண்டங்கள், நாணயங்கள் போன்றவை கிடந்துள்ளன. உமேடா கல்லறை என அழைக்கப்படும் இந்த தளம் ஒசாக்காவில் அமைந்துள்ளது,

இங்கு புதைக்கப்பட்ட மக்கள் ஒசாகா கோட்டை நகரத்திலும் அதைச் சுற்றியும் வாழ்ந்த சாதாரண மக்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

பல உடல்கள் ஒன்றாக புதைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளன. மனித உடல்களை தவிர்த்து ஏராளமான விலங்குகளின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,

கல்லறையின் வடக்கு பகுதியில் நான்கு பன்றிக்குட்டிகளும், தளத்தின் தெற்கில் இரண்டு குதிரைகளும் இதில் அடங்கும் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும், பல்வேறு மட்பாண்டத் துண்டுகள், ஓடுகள், நாணயங்கள், மணிகள், சீப்பு, ஒரு கோப்பை மற்றும் களிமண் பொம்மைகளும் கிடந்துள்ளன.

மனித எலும்புகள் உட்பட அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட சடலத்தின் எலும்புகள் தற்போது வரிசைப்படுத்தப்பட்டு பகுப்பாய்வு செய்யப்படுவதாக ஒசாகா நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் ஆய்வு முடிந்தபின் கட்டுமானம் தொடர அனுமதிக்கும் வகையில், சடலத்தின் எலும்புகள் இடமாற்றம் செய்யப்பட்டு மீண்டும் புதைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்