நண்பனின் ஆசன வாயில் டயர்களுக்கு காற்றடிக்கும் உயர் அழுத்த பம்ப் மூலம் காற்றைச் செலுத்திய நான்கு பேருக்கு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி ஒருவர்.
நார்வே நாட்டில் பார்ட்டி ஒன்றில் பங்கேற்று சுய நினைவின்று கிடந்த நண்பனின் ஆசன வாயில் டயர்களுக்கு காற்றடிக்கும் உயர் அழுத்த பம்பை சொருகி காற்றை செலுத்தியுள்ளார்கள் அவரது நண்பர்கள் ஐவர்.
அத்துடன் அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களிலும் பதிவேற்றம் செய்துள்ளார்கள். அந்த இளைஞனின் ஆசன வாய், உள்ளும் புறம்பும் கடும் சேதமடைந்ததோடு, அதனால் அவர் கடுமையான மன நல பிரச்சினைகளுக்கும் ஆளானார்.
அந்த ஐவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இது நார்வேயில் வழக்கமாக பார்ட்டிகளில் நடக்கும் வேடிக்கை விளையாட்டுதான் என்று கூறியுள்ளார்கள் அந்த 20 வயதுகளிலிருக்கும் இளைஞர்கள்.
ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி, அந்த ஐவரில் நால்வருக்கு ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
ஐந்தாவது நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு 7650பவுண்டுகள் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.