இந்தோனேசிய கிராமம் ஒன்றில், இறந்த தங்கள் உறவினர்களின் உடல்களை மீண்டும் சவப்பெட்டிகளிலிருந்து வெளியே எடுத்து, அழகுபடுத்தி, புத்தாடை உடுத்தி, மீண்டும் அடக்கம் செய்யும் ஒரு அபூர்வ பண்டிகை நடத்தப்படுகிறது.
இந்தோனேசிய கிராமமான Panggalaவில், ஆண்டுதோறும் ஆகத்து மாதத்தில், இது மிகப்பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த கிராமத்தில், இறந்த உறவினர்களின் உடல்களை நேர்த்தியாக பதப்படுத்தி, மம்மியாக்கி, பெட்டிகளில் வைத்து, வீடு ஒன்றிலோ அல்லது தங்கள் சொந்த வீடுகளிலோகூட வைத்துவிடுகிறார்கள்.
ஆண்டுதோறும் இந்த விழாவின்போது, அந்த உடல்களை எடுத்து, அவற்றிற்கு புத்தாடை உடுத்தி அழகு பார்த்து, அவற்றுடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு மீண்டும் சவப்பெட்டிகளில் வைத்து அதற்கென நியமிக்கப்பட்ட வீடுகளில் வைத்துவிடுகிறார்கள்.
அந்த உடல்களை இறந்தவர்களின் உடல் என்றோ, பிணம் என்றோ பார்க்காமல், தங்கள் உறவினர்களாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.
காரணம், இறப்பவர்கள் எங்கும் செல்வதில்லை, நம்மோடுதான் இருக்கிறார்கள், நம்மை அவர்கள் வாழ்த்துகிறார்கள் என்று நம்புகிறார்கள் அவர்கள்.