பிராந்தியங்களில் இராணுவ வீரர்களை குவிக்கும் ஸ்பெயின்! எதற்காக? பிரதமர் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்
167Shares

ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண அந்நாட்டு பிரதமர் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஸ்பெயின், பின்னர் கடுமையான நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் நாளடைவில் வைரஸை கட்டுக்குள் கொண்டுவந்தது.

இருப்பினும் ஸ்பெயினில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கொரோனா தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது.

தற்போது வரை ஸ்பெயினில் 4,12,553 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 28,924 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸுக்கு ஆளானவர்களை அடையாளம் காண ஸ்பெயின் இராணுவத்தின் உதவியைப் பெறப் போகிறது என்று அந்நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ் கூறினார்.

கண்காணிப்பு பயிற்சி பெற்ற சுமார் 2,000 வீரர்கள் பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மாட்ரிட் மற்றும் கேடலோனியா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் வழக்குகள் அதிகரித்து வருவதற்கு வைரஸ் தடமறிதல் இல்லாதது குறித்து சில நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்