வெளிநாட்டில் 30 ஆண்டுகளாக வசித்து வரும் இந்தியாருக்கு அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
1479Shares

இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏற்கனவே சொகுசு கார் ஒன்றை வென்றிருந்த நிலையில், தற்போது அவருக்கு லொட்டரி குலுக்கல் மூலம் ஒரு மில்லியன் டொலர் வென்றுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் லொட்டரி குலுக்கல்களில், பெரும்பாலும் இந்தியர்களே அதிகம் வென்று வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் அங்கு அதிகம் வேலை செய்வதால், அவர்களுக்கு அதிர்ஷ்டம் அடித்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், அதே போன்று தற்போது இந்தியாவை சேர்ந்த Nitesh Sughnani என்ற 35 வயது நபர் Dubai Duty Free Millennium Millionaire குலுக்கலில் ஒரு மில்லியன் டொலரை( இலங்கை மதிப்பில் 18,61,90,900 கோடி ரூபாய்) பரிசாக வென்றுள்ளார்.

கடந்த புதன் கிழமை துபாய் சர்வதேச விமானநிலையத்தின் டெர்மினல் 2-வில் நடைபெற்ற இந்த குலுக்கலில் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

35 வயதான Nitesh Sughnani கே.எச்.டி.ஏவில் உயர் கல்வி இயக்குநராக உள்ளார். 30 ஆண்டுகளாக துபாயில் வசிக்கும் இவர், கடந்த ஆகஸ்ட் 13-ஆம் திகதி அன்று ஆன்லைனில் Millennium Millionaire Series 337-லிருந்து தனது டிக்கெட் எண் 2321-ஐ வாங்கியுள்ளார்.

அந்த டிக்கெட் எண் தான் தற்போது வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ஆம் ஆண்டு Dubai Duty Free-யில் Nitesh Sughnani ஒரு விலையுயர்ந்த சொகுசு பி.எம்.டபில்யூ காரை வென்றுள்ளார்.

அதே போன்று இவரின் தந்தை கடந்த 1995-ஆம் ஆண்டில் இதே போன்று விலையுயர்ந்த பி.எம்.டபில்யூ காரை Dubai Duty Free குலுக்கலில் பரிசாக வென்றுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்