வெளிநாட்டில் வெடி விபத்தில் சிக்கி இலங்கையர் ஒருவர் பலி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நிகழ்ந்த வெடி விபத்து ஒன்றில் சிக்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறையைச் சேர்ந்த Samith Rangana என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள KFC உணவம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

திங்களன்று அந்த உணவகத்தில் வெடி விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அந்த வெடி விபத்தில் Samith Ranganaவும் உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமையன்று ஐக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபி மற்றும் துபாயில் நிகழ்ந்த இருவேறு எரிவாயு வெடிவிபத்து சம்பவங்களில் மூன்று பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமும் அடைந்துள்ளனர்.

வெடி விபத்தில் KFC மற்றும் Hardees உணவகங்களும், அவற்றிற்கு அருகிலுள்ள வேறு சில கடைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது.

newswire

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்