குண்டு மழை பொழிந்த போர் விமானங்கள்: 3 தளபதிகள் உட்பட 37 தீவிரவாதிகள் படுகொலை

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தானின் பார்யப் மாகாணத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் 3 தளபதிகள் உட்பட 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என அந்நாட்டு இராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பார்யப் மாகாணத்தில் புதன்கிழமை போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் தலிபானின் மூன்று தளபதிகள் உட்பட மொத்தம் 37 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு பிராந்தியத்தின் இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது ஹனிஃப் ரெசாய் தெரிவித்தார்.

இராணுவத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலை வைத்து பார்யப் மாகாணத்தின் Qaysar மற்றும் Khawja Sabzposh மாவட்டங்களில் புதன் அதிகாலை விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் தலிபான்களின் முக்கிய தளபதிகளான முல்லா சாதிக், முல்லா பஷீர் மற்றும் பைசுல்லா ஆகியோர் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர், அத்துடன் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

Qaysar மற்றும் Khawja Sabzposh மாவட்டங்களில் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளைத் தாக்க திட்டங்களைத் தீட்டுவதற்காக தலிபான் போராளிகள் கூடியிருந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விமானத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது, இதனால் அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது ஹனிஃப் ரெசாய் விவரித்தார்.

இருப்பினும், தலிபான்களிடம் இருந்து இதுவரை இத்தாக்குதல் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்