மெக்சிகோவில் இறுதிச்சடங்கில் மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோவில் மோரேலஸ் நகருக்கு அருகே உள்ள குர்னாவாக்கா நகரில் நேற்று முன்தினம், மோட்டார் சைக்கிள் விபத்தில் மரணம் அடைந்த ஒருவரது இறுதிச்சடங்கு நடந்து கொண்டிருந்தது.
அப்போது மர்மநபர்கள் சிலர் துப்பாக்கிசூடு நடத்தியதால் பதற்றம் உருவானது, இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் அலறியடித்து ஓடினர்.
இதில் 9 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, 16 பேர் காயமடைந்துள்ளனர், உடனடியாக விரைந்து வந்த அதிகாரிகள் நிலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே நகரில் கடந்த மாதம் துப்பாக்கி ஏந்திய நபர்கள், வீதியில் மது அருந்திக்கொண்டிருந்த 6 இளைஞர்களை குருவியை சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.