இலங்கை கடலில் தீப்பற்றி எரிந்த எண்ணெய் கப்பல்: என்ன நடந்தது, 23 பேரின் கதி என்ன?

Report Print Basu in ஏனைய நாடுகள்
451Shares

குவைத்திலிருந்து இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றி வந்த நியூ டயமண்ட் டேங்கர் கப்பல் இலங்கைக்கு அருகே தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழக்கிழமை காலை என்ஜின் அறையில் ஏற்பட்ட தீ கப்பலில் பரவியுள்ளது.

கப்பலில் 23 ஊழியர்கள் இருந்தனர், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது, மீதமுள்ளவர்கள் கப்பலில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த கப்பல் இலங்கை நகரமான திருகோவிலுக்கு கிழக்கே 38 கி.மீ தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போது தீ பிடித்து எரிந்தது.

ஆனால், கப்பலை இயக்க முடியாமல் கைவிடப்பட்ட பின்னர் கரையை நோக்கி நகர தொடங்கியது.

இப்போது இலங்கை அதிகாரிகள் கரையிலிருந்து தொலைவில் கடலில் கிழக்கு நோக்கி கப்பலை இழுத்து செல்கிறார்கள் என்று செய்தித் தொடர்பாளர் கேப்டன் இண்டிகா டி சில்வா தெரிவித்தார்.

கப்பலில் சுமார் 2 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருக்கும் நிலையில் தீ இன்னும் பரவி வருகிறது என்று இண்டிகா டி சில்வா தெரிவித்தார்.

கப்பலில் இருந்து எண்ணெய் கசிந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார். ரஷ்ய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் கப்பல்கள் தீயணைப்புக்கு உதவுகின்றன என தெரிவித்தார்.

காணாமல் போன பிலிப்பைன்ஸ் மாலுமி இறந்துவிட்டதாக கருதப்படுகிறது. கொதிகலன் வெடித்ததில் அவர் படுகாயமடைந்தார் என்று டி சில்வா கூறினார்.

கப்பல் குழுவில் 5 கிரேக்க மற்றும் 18 பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் காயமடைந்தார், அவர் கப்பலில் இருந்து விமானத்தில் கொண்டு செல்லப்பட்டார், மீதமுள்ளவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்