இஸ்ரேலில் வானத்திலிருந்து விழுந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் ஓடி ஓடி சேகரித்தனர்.
இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ்வில் சமூக ஊடகம் ஒன்றில் ஒரு செய்தி வெளியானது. அதில், வானிலிருந்து இலவச கஞ்சா மழை பொழியும், என்ஜாய் செய்யுங்கள் என்று கூறப்பட்டிருந்தது.
அத்துடன், நாங்கள் கஞ்சா மழை என்ற திட்டத்தை அறிமுகம் செய்கிறோம், வாரந்தோறும் ஒரு கிலோ கஞ்சா 2 கிராம் பாக்கெட்களாக உங்களுக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.
சிறிது நேரத்தில், ட்ரோன் ஒன்று ராபின் சதுக்கம் என்ற பகுதியில் பறக்க, அதிலிருந்து சிறு பொட்டலங்கள் போடப்பட்டன. அந்த பொட்டலங்களில் கஞ்சா இருந்தது.
மக்கள் ஓடி ஓடி அந்த கஞ்சா பொட்டலங்களை சேகரித்தனர். உண்மையில், கஞ்சாவை சட்டப்பூர்வமாகவேண்டும் என்று கோரும் The Green Drone group என்ற அமைப்பின் செயலாகும் இது.
ஆனால், இஸ்ரேலில் அபாயம் என கருதப்படும் ஒரு பொருளை விநியோகிப்பது சட்டப்படி குற்றம் என்பதால், கஞ்சாவை ட்ரோன் மூலம் விநியோகம் செய்த 30 வயதுகளில் இருக்கும் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
விரைவில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.