16 இராணுவ வீரர்கள் பலி: தலிபான் தீவிரவாதிகள் நடத்திய திடீர் சரமாரி தாக்குதலால் அதிகரிக்கும் பதற்றம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஆப்கானிஸ்தான் படைகளை குறிவைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 வீரர்கள் கொல்லப்பட்டனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரிலே இக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நங்கர்ஹரின் கோக்யானி மாவட்டத்தின் காண்டுமக் பகுதியில் ஆப்கானிய இராணுவம் மற்றும் காவல்துறையின் சோதனைச் சாவடிகளை தலிபான் தீவிரவாதிகள் குறிவைத்து தாக்கினர்.

இத்தாக்குதலில் குறைந்தது 16 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் அதிகமானோர் காயமடைந்தனர் என்று உள்ளூர் வட்டாரம் தகவல் தெரிவித்தது.

தலிபானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சமாதான உடன்பாட்டைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று ஆப்கானிஸ்தான் உள் அமைதிப் பேச்சுவார்த்தைகளின் தொடக்க விழா தொடங்கும் என்று வியாழக்கிழமை தலிபான் உறுதிப்படுத்தியது.

சனிக்கிழமை தலிபானுக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையிலான முதல் சுற்று ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்