முதியோர் இல்லத்தில் பெண் ஊழியரின் இரக்கமற்ற செயல்: அம்பலமான சதித் திட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

இத்தாலியில் முதியோர் இல்ல பெண் ஊழியர் சொத்துக்கு ஆசைப்பட்டு முதியவர் ஒருவக்கு விஷம் அளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெரு நாட்டவரான குறித்த 46 வயது ஊழியரை கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறி தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

Turin நகரில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் பணியாற்றி வந்த குறித்த பெண் ஊழியர், அந்த இல்லத்தில் தங்கி வந்த 88 வயது முதியவருக்கு வாகனத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகை திராவகத்தை ரகசியமாக குடிக்கக் கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நோய்வாய்ப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டு வந்தது தெரியவந்தது.

ஆனால் அந்த முதியவர் தொடர்ந்து இந்த திராவகத்தை பயன்படுத்தி வந்ததும், அது சத்து பானம் என கருதப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019 ஜூன் மாதம் நோய்வாய்ப்பட்ட குறித்த முதியவருடன் அதே பெண் ஊழியரே மருத்துவமனைக்கு உடன் சென்றுள்ளார்.

அப்போது பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சந்தேகம் தெரிவிக்கவே, பொலிசார் விசாரணையை முன்னெடுத்தனர். அதில் குறித்த பெண் ஊழியர் சில காலமாக திட்டமிட்டே அந்த முதியவருக்கு ரசாயன திராவகம் அளித்து வந்ததும் அம்பலமானது.

குறித்த பெண் ஊழியருக்கு பண நெருக்கடி இருந்து வந்ததாகவும் அதனாலையே இந்த சதித் திட்டத்தில் அவர் ஈடுபட்டிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்