வெளிநாட்டில் கூட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிரான்ஸ் நாட்டுப்பெண்: பொலிஸ் துறைத் தலைவரின் கருத்தால் சர்ச்சை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர், பாகிஸ்தானில் ஒரு கூட்டம் ஆண்களால், தான் பெற்ற இரண்டு மகள்களின் கண்ணுக்கு முன்னாலேயே கொடூரமாக கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவர், தான் பயணித்த காரில் பெட்ரோல் தீர்ந்துபோனதால் இரவு நேரத்தில் உதவி செய்ய யாருமின்றி தவித்துக்கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு உதவுவதற்கு பதில், அவரை சீரழித்திருக்கிறது ஒரு கூட்டம் மனித மிருகங்கள்.

இந்த சூழலில், பாதிக்கப்பட்ட பெண்னையே பொலிஸ் துறைத்தலைவரான உமர் ஷேக் என்பவர் விமர்சித்துள்ளதால் பாகிஸ்தானிலுள்ள பெண் அமைப்புகளே கடும் கோபமடைந்துள்ளன.

பாகிஸ்தானில், இப்படி இரவு நேரத்தில், யாரும் தங்கள் சகோதரிகளையோ மகள்களையோ பயணம் செய்ய அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார் உமர்.

ஒரு ஆண் கூட துணைக்கு இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காது என்பது போல, ஆண் துணை இல்லாமல் தனியாக வந்ததால்தான் இப்படி நடந்தது, ஆண் துணையின்றி வெளியே இரவு நேரத்தில் வந்தது தவறு என அந்த பெண் மீதே திரும்பத் திரும்ப குற்றம் சாட்டியுள்ளார் உமர்.

அந்த பிரான்ஸ் நாட்டுப் பெண், பாகிஸ்தானை தன் நாடு போல பாதுகாப்பான நாடு என நினைத்துவிட்டாள் போலும் என்றும் கூறியுள்ளார் உமர்.

உமரின் இந்த கருத்துக்கள் நாட்டில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி, இன்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்