வெளிநாட்டில் தங்கமும், பணமும் நிறைந்து கிடந்த பையை கண்டுபிடித்த இந்தியர் செய்த செயல்! நெகிழ்ச்சி சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
912Shares

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கமும், பணத்துடன் கிடந்த பையை கண்டுபிடித்த இந்தியர் அதை அப்படியே பொலிசாரிடம் கொண்டு சென்று ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வசித்து வருபவர் Retesh James Gupta. இந்தியரான இவர், கீழே கிடந்த பை ஒன்றை எடுத்து வந்து பொலிசாரிடம் அப்படியே ஒப்படைத்துள்ளார்.

அந்த பையின் உள்ளே 14,000 டொலர் மதிப்பு கொண்ட பணமும், 200,000 டொலர் மதிப்புள்ள நகைகளும் இருந்துள்ளது. இதனால் அவரின் செயலைப் பாராட்டி துபாய் பொலிசார் கெளரவித்துள்ளனர்.

அவருக்கு, பொறுப்பான குடியிருப்பாளராக இருப்பதற்கான பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இது, Al Qusais காவல் நிலையத்தின் இயக்குநர் Brigadier Yousef, அப்துல்லா சலீம் அல் அடிடி, ஆகியோர் அவருக்கு விருது வழங்கி கெளரவித்துள்ளனர்.

gulfnews

மேலும், அவர்கள் சமூகத்திற்கும் காவல்துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

Retesh James Gupta பையை எங்கே கண்டுபிடித்தார், பொலிசார் அந்த பையை அதன் உரிமையாளருக்கு கொடுத்தார்களா என்பது பற்றிய விவரங்கள் வழங்கப்படவில்லை.

மேலும், தனக்கு விருது வழங்கியதற்காக துபாய் காவல்துறைக்கு நன்றி தெரிவித்த அவர், இந்த கெளரவம் தனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

இவரின் இந்த செயலைக் கண்டு சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்