பாகிஸ்தானில் ஆறாவது முறை திருமணம் செய்த பெண்ணை அவரின் சகோதரர் ஆத்திரத்தில் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப்பை சேர்ந்தவர் நிகத் பர்வீன் (30). இவர் ஐந்து முறை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் ஆறாவதாக வாசீம் அஜ்மத் என்பவரை மணந்து கொண்டார்.
இந்த நிலையில் வாசீம் அஜ்மத் பொலிசில் ஒரு புகார் அளித்தார்.
அதில் என் மனைவி பர்வீனை யாரோ கடத்தி சென்றுவிட்டனர் என தெரிவித்தார்.
இதையடுத்து பொலிசார் பர்வீன் செல்போன் சிக்னலை ஆராய்ந்த போது அது அவரின் பெற்றோர் வீட்டை காட்டியது.
அங்கு சென்று விசாரித்த போது பர்வீன், நண்பர்களை பார்க்க இஸ்லாமாபாத்துக்கு சென்றுள்ளதாக பெற்றோர் தெரிவித்தார்.
பின்னர் பர்வீனின் 22 வயது சகோதரர் அப்துல்லா ஹசீமிடம் விசாரித்த போது தனது சகோதரியை கொலை செய்துவிட்டதாக கூறி பொலிசாரை அதிரவைத்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தில், பர்வீனால் எங்கள் குடும்பத்துக்கு பல அவமானங்கள் ஏற்பட்டது.
ஆறு பேரை திருமணம் செய்ததால் ஊர் மக்கள் அவரின் நடத்தையை பற்றி தவறாக பேசியதோடு எங்கள் குடும்பத்தை பற்றியும் மோசமாக பேசினார்கள்.
இந்த நிலையில் வாசீமை மணந்த சில நாட்களில் எங்கள் வீட்டுக்கு பர்வீன் வந்தார், அப்போது அறையில் அடைத்து வைத்து நான் அவரை சுட்டு கொன்றுவிட்டேன் என கூறியுள்ளார்.
இதையடுத்து அப்துல்லாவை கைது செய்த பொலிசார் அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகா தெரிவித்துள்ளனர்.