கொரோனாவால் இறந்தவர்களுக்கு கல்லறை தோண்ட வைத்து தண்டனை... எதற்கு? எங்கே தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
379Shares

இந்தோனேசியாவில் கொரோனா பரவலை தடுக்க பிராந்திய நிர்வாகங்கள் கடும்போக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் மாஸ்க் அணிய மறுக்கும் பொதுமக்களுக்கு கடுமையான தண்டனையை அறிவித்துள்ளது அங்குள்ள நிர்வாகம்.

அதன்படி, மாஸ்க் அணியாமல் வெளியே நடமாடும் பொதுமக்களுக்கு, கொரோனாவால் மரணமடையும் நோயாளிகளின் கல்லறைகளை தோண்டும் பணியை தண்டனையாக அறிவித்துள்ளது.

இதனிடையே, இந்த விவகாரத்தில் 8 பேர் சிக்கியதாகவும், அவர்களுக்கு கல்லறை தோண்டும் பணியை தண்டனையாக வழங்கியுள்ள தகவல், புகைப்படத்துடன் வெளியாகியுள்ளது.

மேலும், தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரையும் இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கவில்லை எனவும், ஆனால் அதில் இருவரை கல்லறை தோண்ட பணிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட தலைவர் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், கல்லறை தோண்டும் பணிக்கு 3 ஊழியர்களே உள்ளதாகவும், மாஸ்க் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கடைபிடிக்காத இந்த 8 பேரையும் கல்லறை தோண்டும் பணிக்கு ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த தண்டனை, இனிமேலும் எவரும் மாஸ்க் அணியாமல் வெளியே நடமாட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் என தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 3,636 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 218,382 என தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்