சீனாவில் மூன்று மாடி அடுக்கு குடியிருப்பில் இருந்து சிறுமி ஒருவர் கீழே விழுந்ததால், அவரை அக்கம் பக்கத்தினர் காயம் ஏற்படாமல் சாதுர்யமாக செயல்பட்டு காப்பாற்றிய அக்கம் பக்கத்தினரின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சீனாவின் கிழக்கு மாகாணமான Jiangxi-ல் இருக்கும் Ji’an-ல் உள்ள வீட்டில் நான்கு வயது குழந்தை தன்னுடைய தாத்தா, பாட்டியுடன் இருந்து வந்துள்ளார்.
குழந்தையின் பெற்றோர் வேறு நகரத்தில் வேலை செய்து வருவதால், குழந்தை தாத்தா, பாட்டியிடம் இருந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை குறித்த சிறுமி வீட்டில் தனியாக விளையாடிக்கொண்டிருந்தபோது, அவள் குடும்பத்தைத் தேட முயன்றபோது தற்செயலாக, வீட்டின் ஜன்னலுக்கு வந்துவிட்டார்.
பொதுவாக சீனாவில் மூன்று மாடி அடுக்கு குடியிருக்கு 30 அடி உயரம் கொண்டவை என்பதால், அந்த குழந்தை குடியிருப்பின் அந்தரத்தில் நின்ற படி இருந்துள்ளார்.
இதைக் கண்ட பக்கத்து வீட்டுக்கார நபர், உடனடியாக அங்கிருப்பவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதன் படி அனைவரும் கையில் ஒரு பெரிய துணி போன்று ஒன்றை பிடித்து கொண்டிருக்க, குழந்தையும், ஜன்னலுக்கு வெளியே வெகு நேரம் நிற்க முடியாமல் கீழே விழுகிறாள்.
அப்போது இவர்கள் காப்பாற்றுகின்றனர். இனி இது போன்ற சம்பவம் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக சிறுமியின் தாத்த ஜன்னலை சுற்றி பாதுகாப்பு வளையம் ஒன்றை போட திட்டமிட்டுள்ளதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்த பரபரப்பான காட்சியை அங்கிருக்கும் நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட, தற்போது அது வைரலாகி வருகிறது.