உலகை அச்சுறுத்திய வரும் கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி குறித்து சீனா முக்கிய அறிவிப்பு

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா தடுப்பூசிக்காக உலக நாடுகள் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் சீனா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடு நாங்கள் தான் என ரஷ்யா அறிவித்திருந்தாலும், அந்த தடுப்பூசி பாதுகாப்பானதா என்பது குறித்த சந்தேகம் இன்னும் உலகளவில் நிலவிக் கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில், சீனாவில் உருவாக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி நவம்பர் மாதம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு தயாராகும் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனா உருவாக்கி வரும் நான்கு தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனையில் உள்ளன. அவற்றில் குறைந்தது மூன்று ஏற்கனவே ஜூலை மாதம் தொடங்கப்பட்ட அவசரகால பயன்பாட்டு திட்டத்தின் கீழ் அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

3ம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் சுமூகமாக நடந்து கொண்டிருக்கின்றன, நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் தடுப்பூசிகள் பொது மக்களுக்கு போட தயாராக இருக்கக்கூடும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் தலைமை உயிர் பாதுகாப்பு நிபுணர் குய்ஷென் வு கூறினார்.

ஏப்ரல் மாதத்தில் பரிசோதனை தடுப்பூசி ஒன்றை போட்டுக் கொண்ட பின்னர் சமீபத்திய மாதங்களில் எந்த அசாதாரண அறிகுறிகளையும் தான் அனுபவிக்கவில்லை என்று வு கூறினார்.

ஆனால் அவர் எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டார் என்பதைக் குறிப்பிடவில்லை.

அரசு மருந்து தயாரிப்பு நிறுவனமான சீனா தேசிய மருந்துக் குழு (சினோபார்ம்) மற்றும் அமெரிக்காவின் சினோவாக் பயோடெக் எஸ்விஏ.ஓ ஆகியவை அரசாங்கத்தின் அவசரகால பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்று தடுப்பூசிகளை உருவாக்கி வருகின்றன.

CanSino Biologics 6185.HK ஆல் உருவாக்கப்பட்ட நான்காவது கொரோனா தடுப்பூசி ஜூன் மாதத்தில் சீன இராணுவத்தால் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்டது நினைவுக் கூரத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்