மூன்று சூறாவளியால் சின்னா பின்னமான வடகொரியா: நேரில் பார்வையிட்ட கிம் ஜாங் உன் கூறிய வார்த்தை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரியாவில் ஒரே வாரத்தில் மூன்று சுறாவளிகளால் சேதமடைந்துள்ள பகுதியை பார்வையிட்ட கிம் ஜாங் உன், ராணுவத்தின் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.

வடகொரியாவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள காங்புக்-ரி கிராமம் கடுமையான சூறாவாளியால் பெரும் சேதமடைந்தது.

உடனடியாக ராணுவத்தை களமிறக்கிய கிம் ஜாங் உன், புயல் வீசிய பகுதியில் இருந்த மொத்த சேதங்களையும் அப்புறப்படுத்திய ராணுவத்தினர், அந்த மொத்த கிராமத்தையும் புதுப்பொலிவுடன் மாற்றியுள்ளனர்.

வடகொரியாவை சமீபத்தில் மூன்று சூறாவளிகள் தாக்கியது. இதனால் நாட்டின் பெரும் நிலப்பகுதிகள் சேதமடைந்தது. மட்டுமின்றி விவசாய நிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, ஒரு பெரிய உணவு பற்றாக்குறை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரிடையாக சென்று பார்வையிட்ட கிம் ஜாங் உன், ராணுவத்தினரின் பங்களிப்பை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதியை ஒரு கனவு தேசமாக கட்டமைத்துள்ளதாகவும், ராணுவத்தினரின் உழைப்பின் உச்சம் இதுவெனவும் கிம் ஜாங் உன் பாராட்டியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்