உலகின் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்? வெளியான முக்கிய தகவலால் அச்சம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்து உள்ளார்.

இதனால் 2024-ம் ஆண்டின் இறுதி வரை தடுப்பூசி புழக்கத்திற்கு வராது என்று எச்சரித்திருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருந்து நிறுவனங்கள் உற்பத்தி திறனை இன்னும் அதிகரிக்கவில்லை. இது உலக மக்களுக்கு குறைந்த நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதற்கு போதுமானதாக இல்லை.

கொரோனா நோயாளிகளுக்கு பொதுவாக இரண்டு டோஸ் தடுப்பூசி தேவை என்றால் உலகம் முழுவதும் 1,500 கோடி தேவைப்படும்

35 தடுப்பூசிகள் சோதனை நிலையின் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இது உலகில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

ஆனால், கொரோனா பாதிப்பு தடுப்பூசி உற்பத்தியாளர்களின் திறனை விட அதிகமாக உள்ளது.

மேலும் தற்போது தடுப்பூசி இறுதிக்கு அருகில் யாரும் வருவதை கேள்விப்பட்டதில்லை எனக் கூறும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா,

கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்