சீனாவை தோற்கடித்து கெத்து காட்டிய இந்தியா! பாதிக்கு பாதி வாக்கு கூட பெறவில்லை: எதில் தெரியுமா?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் போக்கும் நிலவி வரும் நிலையில், ஐ.நா மகளிர் நிலை ஆணையத் தேர்தலில் சீனாவை இந்தியா தோற்கடித்துள்ளதால், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் கீழ் மகளிர் நிலை ஆணையம் செயல்பட்டு வருகிறது. உலகளவில் பெண்களின் முன்னேற்றம், அதிகாரம், வளர்ச்சி மற்றும் பாலின சமத்துவத்தில் கவனம் செலுத்துவதற்காக மகளிர் நிலை ஆணையம் உருவாக்கப்பட்டது.

ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் 54 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த கவுன்சிலின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், ஆசியா-பசிபிக் பிராந்தியத்தின் பிரதிநிதிகளாக இரண்டு சீட்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இத்தேர்தலில் இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் போட்டியிட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இத்தேர்தலில் ஒட்டுமொத்த வாக்குகளின் எண்ணிக்கை 54. இதில், ஆப்கானிஸ்தானுக்கு 39 வாக்குகளும், இந்தியாவுக்கு 38 வாக்குகளும் கிடைத்தது.

ஐநா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பினரான சீனாவுக்கோ வெறும் 27 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. பாதி வாக்குகளை கூட பெற முடியாமல் சீனா தோல்வியை தழுவியது. இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மகளிர் நிலை ஆணையத்தின் உறுப்பினர்களாக தெரிவு பெற்றுள்ளன.

ஏற்கெனவே இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆசியாவின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டியில் சீனாவை விடுத்து இந்தியா வெற்றிபெற்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஐநாவில் சீனா மீதான நம்பிக்கை குறைந்து வருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்