லொட்டரியை கூட வெல்லலாம்: கொரோனவிலிருந்து தப்பிக்க முடியாது! WHO நிபுணர் எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து அதிர்ஷ்டம் பாதுகாக்கும் என்று நம்புபவர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் முன்னணி நிபுணரிடமிருந்து தெளிவான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

கொரோனா தடுப்பூசி உருவாக்குவதற்கான சோதனைகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் தற்போது உலகளவில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ,புள்ளிவிவர ரீதியாக கொரோனாவிலிருந்து தப்பிப்பதை விட லொட்டரி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என WHO சுகாதார அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.

நாம் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்த வைரஸை நாங்கள் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், இந்த வைரஸ் உலகில் 60 அல்லது 70 சதவீத மக்களுக்கு பரவும் என்று நாங்கள் கருதுகிறோம்.

அதாவது இந்த கிரகத்தில் 200ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என டாக்டர் ரியான் கூறினார்.

அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் கொரோனாவிலிருந்து தப்பிப்பதை விட லாட்டரி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என ரியான் கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்