இரவோடு இரவாக முடக்கப்பட்ட நகரம்: கொரோனா நிலைமை மோசமாவதைத் தடுக்க அவசர நடவடிக்கை

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
343Shares

அயர்லாந்தின் தலைநகரமான டப்ளின் இரவோடு இரவாக முடக்கப்பட்டது. கொரோனா தொற்றை எதிர்கொள்ள அரசு ஏற்கனவே தயாராக வைத்துள்ள திட்டத்தின் மூன்றாவது அபாய கட்டத்திற்கு டப்ளின் செல்ல இருப்பதாக ஐரிஷ் பிரதமர் மைக்கேல் மார்ட்டின் அறிவித்துள்ளார்.

அவசர நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், கொரோனாவால் டப்ளின் மிக மோசமான ஒரு நிலைமையை எட்டும் ஒரு மிக நிச்சயமான அச்சுறுத்தல் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

ஆகவே, டப்ளினில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவிர்க்க முடியாத ஒரு நிலைமை என்று கூறியுள்ள பிரதமர், மக்கள் எந்த அளவுக்கு வெறுப்படைந்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியும், இந்த தொற்றுநோயை தள்ளிவிட எவ்வளவு நாம் விரும்புகிறோம், ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வெண்டும், இந்த கொள்ளைநோய் இன்னமும் பயங்கரமாக சுற்றிவருகிறது, நாம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும் என்கிறார் அவர்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய கட்டுப்பாடுகளின்படி, கட்டிடங்களுக்குள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது, வெளியிடங்களிலும் அதிகபட்சம் 15 வரை மட்டுமே கூட அனுமதியளிக்கப்படுகிறது. உணவகங்களுக்குள் அமர்ந்து உண்ண தடை என்றாலும், வீடுகளுக்கு உணவு வாங்கிச்செல்லும் வகையில் அவை திறந்திருக்கும்.

வெளியே அமர்ந்து உணவு வழங்க முடிவு செய்தால், அதற்கும் அதிகபட்சம் 15 பேருக்கு மட்டுமே அனுமதி.

முதியோர் இல்லங்களில் இருப்போருக்கு உடல் நிலை மோசமாதல் போன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே இரக்கத்தின் அடிப்படையில் அனுமதியளிக்கப்படும், மற்றபடி அதற்கும் தடைதான்.

டப்ளினுக்குள் இருப்போர் வெளியேறவும், வெளியே இருப்போர் உள்ளே வரவும், கல்வி, வேலை மற்றும் பிற அத்தியாவசிய காரணங்கள் இருந்தாலன்றி அனுமதியில்லை.

அயர்லாந்தில் கடுமையாக கொரோனா பரவிவரும் நிலையில், 50% தொற்று அயர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதியடுத்தே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இதற்கிடையில், தொழில்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காக, தாங்கள் எப்போதும் உதவ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள அரசு, 30 மில்லியன் யூரோக்களை உதவிக்காக வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை கலை மற்றும் விளையாட்டுத்துறை ஆகியவற்றிற்கு உதவுவதற்காக 5 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்