இளைஞர்களில் கை விரல்களை துண்டித்து கொடூர தண்டனை: அவர்கள் செய்த குற்றம் என்ன தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
294Shares

ஈரானில் களவு செய்ததாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரின் கை விரல்களை துண்டித்து தண்டனை வழங்க நகர நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துருக்கி எல்லையில் அமைந்துள்ள ஈரானிய நகரமான உர்மியாவில் இந்த கொடூர தண்டனையை அங்குள்ள நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் இந்த மூன்று இளைஞர்களும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இளைஞர்கள் மூவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்தே உர்மியா நகர நீதிமன்றம் அந்த இளைஞர்கள் மூவரின் வலது கையின் நான்கு விரல்களை துண்டிக்க தீர்ப்பளித்துள்ளது.

இந்த தண்டனைக்கு எதிராக குறித்த இளைஞர்கள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், உர்மியா நகர நீதிமன்றம் அளித்த தீர்ப்பையே உறுதி செய்துள்ளது மேல்முறையீட்டு அமர்வு.

இருப்பினும், தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்ற தகவலை இதுவரை நீதிமன்றம் வெளியிடவில்லை என்றே கூறப்படுகிறது.

இதனிடையே இந்த விவகாரம் ஈரானில் தற்போது விவாதமாகியுள்ளது. சட்ட ஆய்வாளர் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

ஈரானை பொறுத்தமட்டில், உடல் உறுப்புகளை துண்டித்து தண்டனை அளிப்பது என்பது அரிதான ஒன்று.

இந்த வகை தண்டனையை விதிப்பதற்கு14 விதிகள் உள்ளன, அவை அனைத்தும் பொருந்துகிறதா என்பதையும் நீதிபதி ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

மட்டுமின்றி, இளைஞர்களுக்கு எதிராக இத்தகைய தண்டனை அரிதானது, ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றமும் இளம் பருவத்தினர் சட்டத்திலிருந்து பாதுகாக்கப்படுவதில்லை என்று தீர்ப்பளித்தது என தெரிவித்துள்ளார் அந்த சட்ட ஆய்வாளர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்