செய்தித்தாள் போடச் சென்ற இளம்பெண் கண்ட வழக்கத்துக்கு மாறான காட்சி: சமயோகித முடிவால் தப்பிய உயிர்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
417Shares

செய்தித்தாள் போடும் இளம்பெண் ஒருவர், வீடு ஒன்றில் முந்தைய நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருந்ததைக் கண்டு எடுத்த சமயோகித முடிவால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் பகுதியில் இரண்டு ஆண்டுகளாக செய்தித்தாள் போடும் வேலையை செய்துவருகிறார் Naomi Jupp (15).

ஒரு நாள் முதியவர் ஒருவர் வீட்டில் செய்தித்தாள் போடச் சென்றபோது, முந்தின நாள் போட்ட செய்தித்தாள் எடுக்கப்படாமல் இருப்பதை கவனித்துள்ளார் நவோமி.

தனது வாடிக்கையாளர்களை நன்கு அறிந்தவரான நவோமி, அந்த வீட்டில் உள்ள முதியவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டிருக்கலாம் என்று எண்ணி, உடனடியாக அவசர உதவியை அழைத்துள்ளார்.

விரைந்து வந்த பொலிசார் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது, அவசரமாக மருத்துவ உதவி தேவைப்படும் நிலையிலிருந்த ஒரு முதியவர் வீட்டுக்குள் இருப்பதைக் கண்டு, அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நவோமியின் சமயோகிதம் மற்றும் இரக்க உணர்வால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டதையடுத்து, பொலிசார் அவருக்கு சிறப்பு விருது ஒன்றை வழங்கி அவரை கௌரவித்துள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்