176 உயிர்களை பலி வாங்கிய உக்ரேனிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது இந்த நாட்டின் சதி திட்டம் தான்: மூத்த ஈரானிய தளபதி பரபரப்பு தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்
65Shares

ஜனவரி மாதம் ஈரான் வான்வெளியில் உக்ரேனிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக நம்புவதாக ஈரானின் மூத்த இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானமான பிஎஸ் 752ஐ சுட்டுக் வீழ்த்திய, இதில் விமானில் பயணித்த 176 பேர் கொல்லப்பட்டனர்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பில்லை என பல நாட்கள் மறுத்து வந்த ஈரான் பின்னர், தனது இராணுவம் பயணிகள் விமானத்தை ஏவுகணை மூலம் தவறுதலாக தாக்கியதாக ஒப்புக்கொண்டது.

இந்நிலையில், இந்த தாக்குதல் அமெரிக்காவால் நடத்தப்பட்ட மின்னணு போர் என தான் நம்புவதாக Khatam al-Anbiya மத்திய தலைமையகத்தின் துணைத் தளபதி ஜெனரல் Abdolali Poorshaseb குற்றம் சாட்டியுள்ளார்.

Khatam al-Anbiya மத்திய தலைமையகம் ஈரானின் உயர்மட்ட இராணுவ செயல்பாட்டு தளமாகும், மேலும் நாட்டின் ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் மேற்பார்வை செய்தல் ஆகியவற்றுக்கு இது பொறுப்பாகும்.

இந்த சம்பவத்தில் அமெரிக்கா சம்பந்தப்படவில்லை என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்று Poorshaseb அரசு தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நேரத்தில் ஏவுகணைகள் வீசப்பட்டதாக எல்லையிலிருந்து கூட தகவல் தெரிவிக்கப்பட்டது என்று Poorshaseb கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்