தரையிறங்கும் போது சுற்றுச்சுவரில் மோதி நொறுங்கிய விமானம்: சோமாலியாவில் பயங்கர விபத்து

Report Print Basu in ஏனைய நாடுகள்
79Shares

சோமாலியாவில் கென்யா சரக்கு விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் சில்வர்ஸ்டோன் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் மொகாடிஷுவில் உள்ள ஏடன் ஆடே விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது.

விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி விமான நிலையத்தின் சுற்றுச்சுவரில் மோதியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சில விமானக் குழுவினர் காயமடைந்ததாக தகவல்கள் வெளிவருவதால் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணிகள் யாரும் பயணிக்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் சோமாலியாவில் விபத்துக்குள்ளான கென்ய விமானங்களின் விமானங்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்