சுலைமானி படுகொலையில் தொடர்புடைய அனைத்து அமெரிக்கர்களையும் கட்டாயம் பலி கொடுப்போம்: ஈரான் கடும் எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்
1100Shares

ஜனவரி மாதம் ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலால் கொல்லப்பட்ட ஈரான் இராணுவ தளபதி குவாசிம் சுலைமானி மரணத்தில் பங்கு வகித்த அனைவரையும் பழி தீர்ப்போம் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிரம்ப்! எங்கள் தலைசிறந்த ஜெனரலின் (சுலைமானி) தியாகத்திற்கான எங்கள் பழிவாங்கல் வெளிப்படையானது, தீவிரமானது மற்றும் உண்மையானது என ஜெனரல் ஹொசைன் சலாமியை மேற்கோள் காட்டி ஐஆர்ஜிசி-யின் வலைத்தளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுலைமானியின் மரணத்திற்கு பழிவாங்குவதற்கான எந்தவொரு ஈரானிய முயற்சிகளுக்கும் அமெரிக்கா கடுமையாக பதிலடி கொடுக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த வாரம் எச்சரித்தார்.

அவர்கள் எங்களை தாக்கினால், நாங்கள் அவர்களை 1000 மடங்கு மோசமாக தாக்கப் போகிறோம் என டிரம்ப் எச்சரித்தார்

சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் ஆப்பிரிக்காவிற்கான அமெரிக்க தூதர் லானா மார்க்ஸை படுகொலை செய்ய ஈரான் சதித்திட்டம் தீட்டியதாக வெளியான அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி டிரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.

தூதர் லானா மார்க்ஸை படுகொலை செய்ய ஈரான் சதித்திட்டுவதாக வெளியான அறிக்கையை நிராகரித்த சலாமி, ஆனால் ஈரான் தளபதி சுலைமானி மரணத்திற்கு பழிவாங்க விரும்வதாக தெளிவுபடுத்தினார்.

சுலைமானிக்கு ஈடாக பெண் தூதரை நாங்கள் தாக்வோம் என்று நினைக்கிறீர்களா? என ஜெனரல் சலாமி கூறினார்.

சுலைமானி படுகொலையில் நேரடியாக மற்றும் மறைமுக தொடர்பு கொண்டிருந்தவர்கள நாங்கள் தாக்வோம்.

படுகொலையில் பங்கு வகித்த அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும், இது ஒரு தீவிரமான எச்சரிக்கை செய்தி. எல்லாவற்றையும் செய்து காட்டி நிரூபிக்கிறோம் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைவர் கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்