மரணத்தின் பிடியில் இருந்து காப்பாற்றப்பட்ட நபர்! முதலையை பழிக்கு பழி தீர்க்க கிராம மக்கள் செய்த செயல்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
802Shares

தாய்லாந்தில் முதலையை பழிவாங்குவதற்காக, அதை பிடித்து வேட்டையாடி, கிராம மக்கள் சமைத்து சாப்பிட முடிவு செய்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

தாய்லாந்தின், Rayong மாகாணத்தின் Mueang மாவட்டத்தில், கடந்த வியாழக்கிழமை சுமார் இரண்டு மீற்றர் நீளம் கொண்ட முதலையை அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் பிடித்து கொன்று, அதன் பின் அதை சமைக்க முடிவு செய்துள்ளனர்.

ஏனெனில், அங்கிருக்கும் கால்வாய் ஒன்றில் 52 வயது மதிக்கத்தக்க Yongyut Hararat என்ற நபர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, குறித்த முதலையானது, அவரின் வலையை சேதமாக்கியதுடன், அவரை கடிக்க முயன்றுள்ளது.

இதைக் கண்ட அங்கிருந்த அவரின் நண்பர்கள் உடனடியாக முதலையிடம் இருந்து, Yongyut Hararat-ஐ காப்பாற்றினர். இருப்பினும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவரின் இந்த நிலைக்கு காரணமான அந்த முதலையை, பழிக்கு பழி தீர்க்க வேண்டும் என்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள், அதை பிடித்து வேட்டையாடி சமைத்து சாப்பிட்டுவிட்டதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறித்த முதலையானது அருகில் இருக்கும், முதல் பண்ணையில் இருந்து தப்பித்திருக்கலாம் என்று கிராம வாசிகள் நம்புகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்