சவுதி கிராமத்தை சரமாரியாக தாக்கிய ஏவுகணைகள்: எங்கிருந்து ஏவப்பட்டது? தொடரும் மர்மம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

சவுதியை குறிவைத்து சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் தெற்கு ஜசான் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தைத் ஏவுகணைகள் தாக்கியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஈரானின் ஆதரவுப்பெற்ற ஏமனின் ஹவுத்தி போராளிகள் இந்த ஏவுகணைகளை ஏவியதாக சந்தேகிக்கப்படுகிறது.

ஏவுகணை தாக்குதலில் கிராமத்தில் மூன்று கார்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஐந்து பொதுமக்கள் சிறு காயங்களுக்கு ஆளானதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலை ஹவுத்தி போராளிகள் தான் நடத்தியதாக இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

ஹவுத்தி போராளிகள் குழு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஏமனில் சவுதி தலைமையிலான கூட்டணியுடன் போராடி வருகிறது.

ஹவுத்தி குழு சமீப நட்களாக சவுதி நகரங்களை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது, அவற்றில் பெரும்பாலானவை சவுதி வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏமன் தலைநகர் சனாவில் சவுதி ஆதரவு அரசாங்கத்தை ஹவுத்திகள் வெளியேற்றினர்.

இதனற்பு பின்னர் கூட்டணி 2015 மார்ச் மாதம் ஏமன் பிரச்சினையில் சவுதி தலையிட்டது நினைவுக் கூரத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்