பழிவாங்கல் முடிந்துவிடவில்லை! டிரம்ப் வாழ்நாள் முழுவதும் எங்கள் இராணுவம் குறி வைக்கும்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Report Print Basu in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ‘அவரது வாழ்நாள் முழுவதும்’ ஈரான் இராணுவத்தின் முக்கிய குறியாக இருப்பார் என ஈரானின் உச்ச தலைவரின் பிரதிநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டதில் பங்கு வகித்ததற்காக, டிரம்ப் தனது வாழ்நாள் முழுவதும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (ஐ.ஆர்.ஜி.சி) குறியாக இருப்பார் என ஈரான் அரசு நடத்தும் செய்தித்தாளின் தலைமை ஆசிரியர் ஹொசைன் ஷரியத்மாதரி செய்தித்தாளில் எழுதியுள்ளார்.

ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தாலும் இல்லையென்றாலும் அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து குறியாக இருப்பார் என்று உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் நெருங்கிய கூட்டாளியுமான ஷரியத்மாதரி கூறினார்.

சனிக்கிழமையன்று, ஐ.ஆர்.ஜி.சி தலைவர் ஹொசைன் சலாமி சுலைமானி மரணத்தில் பங்கு வகித்த அனைவரையும் தாக்வோம் என மிரட்டல் விடுத்தார்.

ஐ.ஆர்.ஜி.சியின் வெளிநாட்டு படைகளான குட்ஸ் படையின் தலைவராக திகழ்ந்த தளபதி சுலைமானி 2020 ஜனவரி 3 ம் தேதி பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஈரான் உச்சதலைவர் கமேனிக்குப் பிறகு நாட்டில் இரண்டாவது மிக முக்கியமான நபராக சுலைமானி கருதப்பட்டார்.

ஈராக்கில் அமெரிக்க படைக்ள உள்ள இராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதன் மூலம் ஈரான் சில நாட்களுக்குப் பிறகு சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுத்தது.

இருப்பினும், சுலைமானியின் மரணத்திற்கான பழிவாங்கல் முடிந்துவிடவில்லை என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்