வடகொரியா அதிபர் கிம்மின் சர்வாதிகாரத்துக்கு எல்லை வேண்டாமா? திருப்பி அனுப்பப்படும் முகக்கவசங்கள்: அதிர்ச்சி தகவ்ல

Report Print Santhan in ஏனைய நாடுகள்

வடகொரியாவில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தென்கொரியா இறக்குமதி செய்த முகக்கவசங்கள் திருப்பி அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் பார்வையில் மர்மங்கள் நிறைந்த நாடாகவே வடகொரியா பார்க்கப்படுகிறது. ஏனெனில் வடகொரியாவில் நடக்கும் விஷயங்கள் எளிதில் வெளி உலகிற்கு தெரிவதில்லை.

இந்நிலையில், வடகொரியா கொரோனா நேரத்தில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவித்து இருந்தது.

அங்கு வாழும் மக்களுக்கு சரியான உணவு இல்லாமலும், மருத்துவக் கட்டமைப்புக்கள் குறைவாக இருப்பதாக கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி வடகொரியாவில் வாழ்ந்து நியூயார்க்கிற்குத் தப்பிச்சென்ற இளம் பெண் ஒருவர் தனது 13 ஆவது வயது வரை பூச்சிகளை உண்டு வாழ்ந்ததாக பொதுவெளியில் கூறி அதிரவைத்தார்.

வடகொரியவில் கேட்பாரற்று கிடக்கும் பிணங்கள் ஏராளம் என்றும் புரதச்சத்திற்கு அந்நாட்டின் பெரும்பாலான மக்கள் பூச்சிகளைத்தான் நம்பியிருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இது போன்ற நிலை தான் வடகொரியாவில் இருப்பதாக கூறப்படும் நிலையில், கொரோனா தாக்கம் வடகொரியாவின் நிலைமையை மேலும் மோசமாக்கி வருவதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இதற்கிடையில், தென்கொரியா வடகொரியாவிற்கு முகக்கவசங்களை கொரோனாவிற்காக அனுப்பியுள்ளது. ஆனால், வடகொரியாவோ அதை திருப்பி அனுப்பி வருவதாகவும், இவை தென்கொரியாவில் தயாரிக்கப்பட்டவை என்ற ஒரே காரணத்திற்காக அத்யாவசியத் தேவையான முகக்கவசங்களைக் கூட திருப்பி அனுப்பி வருவதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

வடகொரியாவில் முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடுகள் நிலவி வரும் சூழலில் அதிபர் கிம் இன் நிர்வாகத்தின் முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், கடந்த ஜுலை மாதத்தில் தென்கொரிய எல்லையில் உள்ள கோசங்கி எனும் பகுதியில் கொரோனா அறிகுறிகளோடு ஒருவர் காணப்பட்டார்.

இதனால், கிம், தென்கொரியாவின் அனைத்து எல்லைகளையும் இழுத்து மூடினார். அடுத்ததாக தென்கொரியாவுடன் இருக்கும் அனைத்து நிர்வாக உறவுகளையும் துண்டித்துக் கொண்டார்.

தற்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையிலும் கிம் இதே நடைமுறையைக் கையாளுவதாக கூறப்படுவதால், அங்கிருக்கும் மக்களின் நிலைமை என்னவாகுமே என சர்வதேச அரங்கில் அதிபர் கிம் மீது விமர்சனங்களும் வைக்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்