இரண்டாவது கொரோனா தடுப்பூசியும் தயார்! பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யா அக்டோபர் மாதத்திற்குள் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 15ம் தேதிக்குள் கொரோனாவுக்கு எதிராக இரண்டாவது சாத்தியமான தடுப்பூசியை ரஷ்யா பதிவு செய்யும் என எதிர்பார்ப்பதாக

ரஷ்ய நுகர்வோர் பாதுகாப்பு கண்காணிப்புக் குழுவான Rospotrebnadzor-ஐ மேற்கோளிட்டு TASS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை சைபீரியாவின் வெக்டர் நிறுவனம் உருவாக்கியுள்ளது, கடந்த வாரம் இந்த தடுப்பூசியின் ஆரம்ப கட்ட மனித சோதனைகளை நிறைவடைந்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா தனது முதல் தடுப்பூசியான ‘ஸ்புட்னிக் வி’-ஐ ஆகஸ்ட் மாதம் மாஸ்கோவின் கமலேயா நிறுவனம் உருவாக்கியது.

குறைந்தது 40,000 பேர் சம்பந்தப்பட்ட இறுதிகட்ட சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

‘ஸ்புட்னிக் வி’ முழுமையாக முடியாததால் அது பாதுகாப்பானது இல்லை என உலகம் முழுவதும் உள்ள நிபுணர்கள் எச்சரித்தனர். ஆனால், தனது தடுப்பூசி பாதுகாப்பானது என ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்