பர்ஸை தவறவிட்ட நபர்... CCTV கமெராவில் கண்ட காட்சி

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருந்த நிலையில் கூட்டத்தில் பர்ஸை தவறவிட்ட ஒருவர் தனது பர்ஸைக் கண்டுபிடித்த பெண்ணை தேடி வருகிறார்.

அயர்லாந்து தலைநகர் டப்ளினைச் சேர்ந்த Dwayne Freeman தனது பர்ஸை தவறவிட்டிருந்தார்.

இந்நிலையில், அந்த பர்ஸ் தனது வீட்டின் முன் உள்ள லெட்டர் பாக்ஸில் இருப்பதைக் கண்டுபிடித்தார் Dwayne.

அது எப்படி அங்கே வந்தது என்பதை அறிவதற்காக தனது CCTV கமெராவை ஆரய்ந்தார் அவர். அப்போது, ஒரு பெண் அந்த பர்ஸைக் கொண்டு வந்து தனது வீட்டின் முன் உள்ள லெட்டர் பாக்ஸில் போடுவது தெரியவந்தது.

பர்ஸை சோதித்தபோது, அதிலிருந்த பணம், கிரெடிட் கார்டுகள் முதலானவை பத்திரமாக இருப்பதைக் கண்டு அவர் நிம்மதி அடைந்தார்.

Image: Facebook

குழந்தை பிறக்க இருந்த நேரத்தில் அந்த பணம் எவ்வளவு அவசியம் என்பது அவருக்குத்தான் தெரியும்.

அப்படிப்பட்ட ஒரு சூழலில், தனது பர்ஸை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்ததோடு, பிரதிபலனாக ஒரு நன்றியைக் கூட எதிர்பாராமல் சென்ற அந்த பெண்ணைத் தேடி வருகிறார் Dwayne.

Dwayneஇன் ஓட்டுநர் உரிமத்தில் இருந்த முகவரியைப் பார்த்து, அந்த பர்ஸை அந்த பெண் கொண்டு சேர்த்துள்ளார்.

அவரைப் பார்த்து அவருக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் வண்ணமாக, பூக்களூம் சொக்லேட்டுகளும் வாங்கிக் கொடுக்க விரும்புகிறார் Dwayne.

CCTV கமெராவில் பதிவாகியிருக்கும் அவரது வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்து, அவரைக் கண்டுபிடித்து தனது நன்றியைத் தெரிவிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார் Dwayne.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்